தமிழகத்தின் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனு: மார்ச் 5-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

Sunday, 28 Feb, 8.14 pm

தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு கல்வி அரசு வேலைவாய்ப்பில் 69 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மார்ச் 5-ம்தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வருகிறது.

கடந்த 2012-ம் ஆண்டில் இதேபோன்ற மனு, தமிழகத்தின் இடஒதுக்கீட்டுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டு, அது விசாரணையின் நிலுவையில் இருக்கிறது. தற்போது தினேஷ் என்பவரும் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்துள்ளார். இரு மனுக்களும் சேர்ந்து விசாரிக்கப்பட உள்ளன.