பெரம்பலூர்: 6 பேர் சென்ற இருசக்கர வாகனம் கார் மீது மோதி விபத்து: 5 பேர் உயிரிழப்பு

Sunday, 28 Feb, 10.33 pm

பெரம்பலூர் அருகே இருசக்கர வாகனம், கார் மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனையில் இருவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் அருகே உள்ள வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்பவரின் மனைவி பரமேஸ்வரி. இவர் அவரது குழந்தைகளான செந்நிலவன் (3), தமிழ்நிலா (2), உறவினரின் குழந்தை நந்திதா (2), மற்றும் அவரது அம்மா தனம், சகோதரர் சக்திவேல் ஆகிய ஆறு பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் கொளப்பாடியில் இருந்து வேப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.


இந்தநிலையில் அவர்கள் கள்ளங்காடு என்ற இடத்தின் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் காரின் மீது மோதி விபத்திற்குள்ளானது.